பதவி உயர்வு பெற்றுச் செல்லும் யாழ் மாவட்ட அரச அதிபருக்கு பிரிவுபசாரம்! யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் கணபதிப்பிள்ளை மகேசனின் பிரிவுபசார விழா இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.