புத்தாண்டு பண்டிகை காலத்திற்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் ஒதுக்கீடு, எரிபொருள் சரக்கு இறக்குமதி திட்டம் மற்றும் எரிபொருள் விநியோகம் மற்றும் தேசிய எரிபொருள் பாஸ் QR அமைப்பு ஆகியவை விவாதிக்கப்பட்டு மதிப்பாய்வு செய்யப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கூறினார்.
எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் காரணமாக மாதாந்த எரிபொருள் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அவதானிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வாரங்களில் தினசரி எரிபொருள் நுகர்வு மற்றும் எரிபொருள் வெளியீடு தரவு எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படுவதற்கு முன்னர் தினசரி எரிபொருள் வெளியீடு போலவே இருப்பதையும் அவதானிக்க முடிந்தது.
மேலும், எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்த பிறகு, QR குறியீட்டின் தவறான பயன்பாடு கணிசமாக குறைந்துள்ளது.