எதிர்வரும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் நாடளாவிய ரீதியில் வீதி ஓரங்களில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள எவருக்கும் அனுமதி வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை வீதி ஓரங்களில் தற்காலிகமாக விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
“இதுவரை, மஹரகம நகரம் உட்பட பல இடங்களில் ஆடை பொருட்களை விற்பனை செய்வதற்காக சாலை ஓரங்களில் இதுபோன்ற சிறப்பு இடங்களை நாங்கள் ஒதுக்கியுள்ளோம்.”
இதன்படி, தற்காலிகமாக சுயதொழிலில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள், பண்டிகைக் காலம் முடியும் வரை, நாட்டின் பிற பகுதிகளிலும், தங்கள் பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்பை வழங்குவோம்,” என்றார்.
மேலும், குறித்த பிரதேச செயலாளரின் அனுமதியுடனும் மேற்பார்வையுடனும் குறிப்பிட்ட பிரதேசங்களில் நிரந்தர நிர்மாணங்களை மேற்கொள்ளாமல் வீதி ஓரங்களில் தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு உற்பத்தியாளர்கள் தற்காலிகமாக இந்த அனுமதியைப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குணவர்தன வலியுறுத்தினார்.