பண்டாரவளை கிரிஓருவ வீதியின் ஐசெலாப் பகுதியில் லொறி ஒன்று நேற்று (22) மாலை விபத்துக்குள்ளானது. இதில் தோட்டத் தொழிலாளர்கள் 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த 19 பெண்களும் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படுகாயமடைந்த 7 பெண்கள் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பண்டாரவளை சென்ஜென்டில் தோட்டப் பணி முடிந்து தொழிலாளர்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.