நுவரெலியாவிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் பொலிஸ் நிலையத்தின் பிரதானியாக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மதுபானம் அருந்தி அநாகரீகமாக நடந்துகொண்டார் என்ற சந்தேகத்தின் பேரில் நுவரெலியா பொலிஸாரால் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.
ரசிக குமார என்ற பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த அதிகாரி கீர்த்தி பண்டாரபுர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர். விஷேட கடமைகளுக்காக நுவரெலியாவிற்கு அழைக்கப்பட்டு ஜனாதிபதி அலுவலகத்தில் பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ளார்.