கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள சிவனார்புரம் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில், தனியார் பட்டாசு தயாரிக்கும் நிறுவனத்தில் நேற்று மாலை அரியாங்குப்பம் ஓடைவெளி பகுதியை சேர்ந்த 10 பேர் பணியாற்றினர். அப்போது பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியது.
இதில் மணவெளி பகுதியை சேர்ந்த மல்லிகா (60) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து கடலூர் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்து 8 பேரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 5 பேர் 80 சதவீத தீக்காயங்களுடன் உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.