Homeஇலங்கைபட்டதாரி யுவதியை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயற்சித்த முன்னாள் காதலன் அடித்துக் கொலை!

பட்டதாரி யுவதியை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயற்சித்த முன்னாள் காதலன் அடித்துக் கொலை!

Published on

பட்டதாரி யுவதி ஒருவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயற்சித்தார் என கூறப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக ரொட்டம்ப பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரத்தினபுரி, கஹவத்த பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் குறித்த யுவதியுடன் சிறிது காலமாக காதல் உறவில் இருந்துள்ளார்.

இந்நிலையில், அந்த யுவதி அவருடனான உறவை நிறுத்தியதால், காதலன் தொலைபேசியில் திட்டி மிரட்டியுள்ளார். இச்சம்பவத்துக்கு முன்னைய நாளும் (3) யுவதியை மிரட்டியதால் அவரின் பெற்றோரும் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (4) அந்த யுவதியின் வீட்டுக்கு வந்த நபர், குறித்த யுவதியை பலாத்காரமாக அழைத்துச் செல்ல முயற்பட்டபோதே அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Latest articles

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம்

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னை சைதாப்பேட்டை ஜோன்...

பேருவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்

பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) இரவு கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...

More like this