இலங்கையில் பெருந்தோட்ட பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்வதற்காக இரண்டாயிரத்து 840 பேருக்கு புதிதாக நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வெகு விரைவில் வழங்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டார்.