கடவட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை காரில் கடத்திச் சென்று கூரிய ஆயுதங்களால் தாக்கி முகத்தில் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவியதாக கூறப்படும் சந்தேகநபர் கொலன்னாவ நாகஹமுல்ல பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் “கட் இஷாரா” என அழைக்கப்படும் முப்பத்தொரு வயதுடைய இளைஞர் எனவும், அவரிடம் கார், ஐஸ் போதைப்பொருள், வாள், மன்னா கத்தி மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பனவும் இருந்ததாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.