பச்சை குத்துவதால் சமூக நோய்கள் பரவும் போக்கு அதிகரித்து வருவதாக தேசிய இரத்த மாற்று சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஸ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே பச்சை குத்தியவர்களிடம் இருந்து இரத்தம் எடுக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டார்.நாட்டில் உள்ள பெரும்பாலான பச்சை குத்தும் மையங்கள் சுகாதார பிரிவினரின் பரிந்துரைகளைப் பின்பற்றாததால், ஆபத்து மேலும் தீவிரமடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
இரத்த தானம் செய்பவரின் இரத்தமானது, நான்கு பேரின் இரத்த தேவைகளுக்காக பயன்படுத்துவதாகவும், இதனால் தேவையற்ற அவதானத்தினை எடுக்க வேண்டாம் என தேசிய இரத்தமாற்ற சேவை தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, பச்சை குத்துதல், தோல் குத்துதல் போன்ற செயல்களைச் செய்தவர்கள், அது தொடர்பான பணிகளைச் செய்து ஒரு வருடத்திற்கு இரத்த தானம் செய்பவர்களாகத் தொடர்பு கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.