இலங்கைக்கு 56 வகையான அத்தியாவசிய மருந்துகள் அடங்கிய மருந்து பொருட்களை நன்கொடையாக வழங்குவதற்கு பங்களாதேஷ் அரசாங்கம் முன்வந்துள்ளது.
மேலும் 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் ( 830 மில்லியன் ரூபாய்) பெறுமதியுடைய அத்தியாவசிய மருந்துகளே இவ்வாறு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதனை உத்தியோகபூர்வமாக வழங்கும் விழா இன்று டாக்காவில் நடைபெறவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.