பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் கட்டடமொன்றில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தபட்சம் 15 பேர் பலியானதுடன் மேலும் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர்.
டாக்காவின் வர்த்தகப் பிரதேசத்திலுள்ள அலுவலகக் கட்டடமொன்றில் இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
7 மாடி கட்டடத்தின் 5 ஆவது மாடியில் இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இவ்வெடிப்புச் சம்பவத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.