சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பங்களாதேஷ் பிரதமரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய 54 வகையான அத்தியாவசிய மருந்து பொருட்களை இலங்கைக்கு வழங்குவதற்கு பங்களாதேஷ் தீர்மானித்துள்ளது.
இதன்படி, பங்களாதேஷ் சுகாதார அமைச்சின் தலையீட்டுடன் வழங்கப்படும் இந்த மருந்து பொருட்கள் 58 ஆயிரத்து 307 அமெரிக்க டொலர் பெறுமதியானவை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மருந்துகள் அடுத்த வாரமளவில் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.குறித்த மருந்து தொகையில் புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளும் அடங்குவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.