நோய் எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டமையால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக கேகாலை போதனா மருத்துவமனையில் மரணமொன்று சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த 10ஆம் திகதி கேகாலை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நோய் எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என்றும் மருத்துவமனையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் சர்ச்சைக்குரிய மருந்தான செஃப்டர் எக்ஸோன் மருந்தும் குறித்த நபருக்கு வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் சிரேஸ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை களுத்துறை – நாகொட மருத்துவமனையில் மயக்க மருந்து தட்டுப்பாடு காரணமாக சிசேரியன் சத்திர சிகிச்சைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு மருத்துவமனையின் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார்.