தேசிய மக்கள் முன்னணியால் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பலர் காயமடைந்திருந்தனர்.
இந்த நிலையில் காயமடைந்திருந்த நிவித்திகல பிரதேச சபை வேட்பாளர் நிமல் அமரசிறி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நிமல் அமரசிறி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.