போக்குவரத்து அமைச்சின் தலையீட்டுடன் அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் கட்டணத்தை 10 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிவேக நெடுஞ்சாலையில் இயங்கும் பேருந்துகளில் உரிமக் கட்டணமாக வசூலிக்கப்படும் பணத்தில் சிலவற்றை குறைத்து பேருந்து கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
அதிவேக நெடுஞ்சாலையில் பஸ்களின் அனுமதிப்பத்திரத்தில் பாரிய பிரச்சினை காணப்படுவதாகவும், அதனை மூடிமறைக்கும் வகையில் அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.