இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமிகள் கலந்துள்ளதால் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பத்து பேரின் பார்வை பலவீனமடைந்துள்ளதாக நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் மகேந்திர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலை வட்டாரங்கள் மூலம் கிடைத்த சில தகவல்கள் தொடர்பில் அத தெரணவிடம் வினவிய போது, ஏப்ரல் 05 ஆம் திகதிக்கு பின்னர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளர்களுக்கு சத்திரசிகிச்சைக்குப் பின்னர் வழங்கப்பட்ட மருந்தின் காரணமாக அவர்களின் கண்பார்வை பலவீனமடைந்துள்ளது அல்லது முற்றாக இழந்துள்ளதாக வைத்தியர் செனவிரத்ன குறிப்பிட்டார். .
மேலும், சத்திரசிகிச்சைகள் முடிந்து வீடுகளுக்குச் சென்ற நோயாளர்கள் கண்பார்வை முற்றாக இழந்த நிலையில் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான சிகிச்சைகளை மேற்கொண்டு படிப்படியாக குணமடைந்து வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.