Homeஇலங்கைநுவரெலியா மாவட்டத்தில் பனி மூட்டம் காணப்படுவதனால் வாகன சாரதிகள் அவதானம்

நுவரெலியா மாவட்டத்தில் பனி மூட்டம் காணப்படுவதனால் வாகன சாரதிகள் அவதானம்

Published on

நுவரெலியா மாவட்டத்தில் அடை மழையுடன் கடும் பனி மூட்டம் காணப்படுவதனால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்த வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையினை தொடர்ந்து மத்திய மலைநாட்டில் பல பிரதேசங்களில் தொடர்ச்சியாக மழையுடனான வானிலை நிலவி வந்தது.

இந்நிலையில் இன்று ஒரு சில பிரதேசங்களுக்கு காலை வேளை சீரான வானிலை காணப்பட்டதுடன் பகல் வேளையில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடன் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் பிட்டவல, கினிகத்தேனை. தியகல, வட்டவளை, ரொசல்ல, ஹட்டன் உள்ளிட்ட பிரதேசங்களிலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாகம, கொட்டகலை, சென்கிளையார், தலவாக்கலை, லிந்துலை, சமர்செட், நானுஓயா ரதல்ல உள்ளிட்ட பிரதேசங்களில் கடும் பனிமூட்டம் அடிக்கடி காணப்படுவதனால் இந்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக செலுத்துமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

பனிமூட்டம் காணப்படும் பிரதேசங்களில் பயணிக்கும் போது தமக்குரிய பக்கத்தில் வாகனத்தின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு பயணிப்பதன் மூலம் வாகன விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளலாம் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பனிமூட்டம் காரணமாக ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகள் உள்ளிட்ட பல வீதிகளில் வாகன போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

Latest articles

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம்

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னை சைதாப்பேட்டை ஜோன்...

பேருவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்

பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) இரவு கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...

More like this