நுவரெலியா, லபுகெலே பகுதியில் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் லொறி ஒன்று பள்ளத்தில் விழ்ந்ததில் குறைந்தது 14 பேர் காயமடைந்துள்ளனர்.
லபுகெலேயில் அமைந்துள்ள காய்கறி பண்ணையில் இருந்து மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து மரக்கறிகளை கொண்டு வருவதற்காகச் சென்ற தொழிலாளர்கள் குழுவும் உள்ளடங்கும்.
கொத்மலை பொலிஸ் அதிகாரிகள் பிரதேசவாசிகளின் ஆதரவுடன் காயமடைந்த நபர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் அவர்களில் 05 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது லொறியில் 15 பேர் பயணித்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் லொறி கவிழ்ந்த போது அதில் இருந்து குதித்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.