மொனராகலை குமாரவத்த பகுதியில் நேற்று திங்கட்கிழமை 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த குழந்தை தனது வீட்டின் பக்கத்திலுள்ள குழந்தைகளுடன் விளையாட்டில் ஈடுபட்டிருந்ததுடன், வெகு நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் தாயார் தேடிய போதே குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்திருந்துள்ளது.
மேலும் குழந்தையை மொனராகலை மாவட்ட பொது வைத்தியாசலைக்கு அழைத்து சென்ற போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.