யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பொக்கணைப் பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் முன்னரும் பல தடவைகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண் மீது நீதிமன்றில் வழக்குகள் உள்ள போதிலும் தொடர்ந்து சட்டவிரோதமாக கசிப்பு காய்ச்சி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவ்வாறு இருக்கையில் நேற்றைய தினம் கோப்பாய் பொலிசார் 38 வயதுடைய குறித்த பெண்ணை கைது செய்தனர் அப்போது அவரிடம் விற்ப்பனைக்கு தயாராக இருந்த 6 லீற்றர் கசிப்பினையும் பொலிசார் மீட்டுள்ளனர்.மேலதிக விசாரணைகளின் பின் குறித்த பெண்ணை நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.