நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தற்போது டெங்கு தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள செய்தியிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 66476 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான வாய்ப்பு அதிகளவில் காணப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.