செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்நிலவில் இரண்டாமவராக கால் பதித்தவர் 93ஆவது பிறந்தநாளில் 4ஆவது திருமணம்.

நிலவில் இரண்டாமவராக கால் பதித்தவர் 93ஆவது பிறந்தநாளில் 4ஆவது திருமணம்.

Published on

spot_img
spot_img

நிலவில் இரண்டாமவராக கால் பதித்த பஸ் அல்ட்ரின் தனது 93ஆவது பிறந்த நாளில் நான்காவது முறை தனது நீண்ட கால காதலியை திருமணம் புரிந்துள்ளார்.

நீல் ஆம்ஸ்ட்ரோங் முதல் முறை நிலவில் கால் பதித்த 1969 அப்பலோ 11 விண்வெளிப் பயணத்தில் அல்ட்ரினும் இடம்பெற்றதோடு ஆம்ஸ்ட்ரோங்கிற்கு அடுத்து நிலவில் கால் பதித்தார். நிலவில் நடந்த உயிர்வாழும் நான்கு பேரில் ஒருவராகவும் அவர் உள்ளார்.

இரசாயனப் பொறியியல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற 63 வயது அன்கா பவுரியையே அவர் திருமணம் செய்தார். அவர் அல்ட்ரின் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பிரதித் தலைவராக உள்ளார்.

அல்ட்ரினின் பிறந்த நாளான ஜனவரி 20 ஆம் திகதியே இருவரும் திருமணம் புரிந்தனர். வீட்டை விட்டு ஓடிப்போன வாலிபர்கள் போல உற்சாகமாக இருப்பதாக அல்ட்ரின் குறிப்பிட்டுள்ளார். நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் வைத்து 19 நிமிடங்கள் கழித்து அல்ட்ரின் அவரை பின்தொடர்ந்தார். 1971 இல் நாசாவில் இருந்து ஓய்வு பெற்ற அல்ட்ரின் 1998இல் விண்வெளி ஆய்வு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஷேர்ஸ்பேஸை நிறுவினார்.

நீல் ஆம்ஸ்ட்ரோங் 2012 இலும், மைக்கேல் கொலின்ஸ் 2021 இலும் மரணித்த பின்னர் நிலவில் காலடி வைத்த முதல் குழுவில் எஞ்சியிருக்கும் ஒரே நபராக பஸ் அல்ட்ரின் உள்ளார்.

Latest articles

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்…..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்

பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு…..

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. இதன்படி,...

யாழில் பாணுக்குள் கண்ணாடித்துண்டுகள் : விசாரணைகள் முன்னெடுப்பு…

யாழ்ப்பாணம், மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு ஒன்று காணப்பட்டுள்ளது. பாணை வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள்...

More like this