துருக்கியில் நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரு பிராந்தியங்கள் தவிர்த்து, அனைத்து பகுதிகளிலும் மீட்பு நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 46,000ஐ தொட்டுள்ளது. ஒரே ஒரு பிராந்தியத்தில் மட்டும் 23,000 பேர் வரை பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், Kahramanmaras மற்றும் Hatay பிராந்தியங்களை தவிர்த்து, எஞ்சிய பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை முடித்துக் கொண்டுள்ளதாக நாட்டின் பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அது மட்டுமின்றி, கட்டிட இடிபாடுகளில் சிக்கி, மேலும் யாரேனும் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையும் மக்கள் இழந்துள்ளனர்.
மேலும், துருக்கியில் மொத்தமாக 345,000 தொகுப்பு வீடுகள் சேதமடைந்துள்ளன, பல எண்ணிக்கையிலான மக்கள் மாயமானதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். அது மட்டுமின்றி, இன்னும் எத்தனை பேர் கண்டுபிடிக்கப்படவில்லை என்று துருக்கியோ அல்லது சிரியாவோ இதுவரை உறுதியாகக் கூறவில்லை.
இதனிடையே, இரண்டு மாகாணங்களில் சுமார் 40 கட்டிடங்கள் தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் தொடர்கின்றன, ஆனால் ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் இந்த எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.