நியூசிலாந்தில் புகைபிடிப்பதை தடை செய்ய, அந்நாட்டின் தொழிலாளர் கட்சி மற்றும் கட்சியின் தலைவரான பிரதமர் ஜசிந்தா எர்டெர்ன் எடுத்த தீர்மானத்தினை இடைநிறுத்த புதிய பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் மற்றும் அவரது வலதுசாரி தேசிய கட்சி கூட்டணி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதமர் ஜசிந்தா எர்டெர்னும் அவரது தொழிற்கட்சி அரசாங்கமும் 2008 க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனையைத் தடை செய்ய தீர்மானித்தனர். அதன்படி, புகைபிடிப்பதை தடை செய்த முதல் நாடு என்ற பெருமையை நியூசிலாந்து பெற்றது.
புதிய பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனின் கூட்டணி அரசாங்கம் வரிகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. புதிய பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், வரி குறைப்புகளுக்கு நிதியளிப்பதற்காக முந்தைய தொழிற்கட்சி அரசாங்கத்தின் புகைபிடித்தல் தடையை இடைநிறுத்த வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.