வருடம்தோறும் நிப்பான் பெயிண்ட் நிறுவனத்தினரால் நாடளாவியரீதியில் சமூகமட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மரதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு 5000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது,
ஆஞ்சநேயர் ஆலய பிரதம குருவின் ஆசியுரையோடு , மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற உலர் உணவு பொதி வழங்க நிகழ்வு சிறப்பாக இடம் பெற்ற குறித்த நிகழ்வில் நிப்பொன் பெயிண்ட் நிறுவனத்தின்
பிராந்திய முகாமையாளர் மகேந்திரம் பெருமாள் மற்றும் நிப்பொன் பெயிண்ட் நிறுவனத்தின் பிரதேச முகாமையாளர்கோமஸ் றொய்ஸ், பிரதேச விற்பனை பிரதிநிதி விமலேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான உலர் உணவு பொதியினைவழங்கிவைத்தனர்.