Homeஇலங்கைநிதி பற்றாக்குறையால் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதிகளின் அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தம்.

நிதி பற்றாக்குறையால் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதிகளின் அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தம்.

Published on

நிதிப் பற்றாக்குறையால் அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து நிதி கிடைக்கும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் தெரிவித்துள்ளார்.

ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை, மத்திய அதிவேக வீதியின் தம்புள்ளை பிரிவு மற்றும் கண்டி ஆகிய மூன்று நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

நிதிப்பிரச்சினை காரணமாக பல வீதிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், தரைவிரிப்புகள் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் வீரகோன் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம பிரிவின் நிர்மாணப் பணிகள் மந்தகதியில் இடம்பெற்று வருவதாகவும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பணம் கிடைத்தவுடன் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வீதி நிர்மாணத்திற்கு தேவையான மூலப்பொருட்களின் விலை முரண்பாடாக அதிகரித்துள்ளதாகவும், பொருளாதார நிலைமை காரணமாக கட்டுமான மூலப்பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பல வீதிகள் முறையான பராமரிப்பு இன்மையால் பாழடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest articles

யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே படகுச் சேவை ஆரம்பம்!

யாழ். காங்கேசன்துறை - தமிழகம் இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள்,...

நாட்டின் இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் படுகாயம்

நாட்டின் இருவேறு பகுதிகளில்  ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ்...

டீசல் நிரப்பிய போது தனியார் பஸ்சில் திடீர் தீ: நெல்லையில் இன்று காலை பரபரப்பு

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று டீசல் நிரப்புவதற்காக வந்தது....

யாழில் தவறான முடிவால் உயிரிழந்த முதியவர்.

யாழில் மகன் அனுப்பிய பணத்தினை நம்பிக்கை அடிப்படையில் பெண்ணொருவருக்கு வழங்கிய முதியவரொருவர் உயிரை மாய்த்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (19.03.2023)...

More like this