செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைநிதியமைச்சரின் உரை தொடர்பில், சஜித்தின் பதில்!

நிதியமைச்சரின் உரை தொடர்பில், சஜித்தின் பதில்!

Published on

spot_img
spot_img

சபாநாயகரிடம் சமர்பித்த இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளை நாளை (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் நிதியமைச்சரின் உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“இங்கே வந்து பொய் வாக்குமூலம் கொடுக்க வேண்டாம், இதற்கு காரணமானவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வீட்டிற்கு செல்ல வேண்டும், பிரதமர் தலைமையிலான அரசாங்கம் வீட்டிற்கு செல்ல வேண்டும், இரண்டு நம்பிக்கை பிரேரணைகளை கொண்டு வந்துள்ளோம். இந்த 225 பேரில் யார் யார் இந்த நாட்டு மக்கள் மக்கள் பக்கம் இருக்கிறார்கள்? யார் யார் திருடர்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று இந்த நாட்டு மக்களுக்கு பார்த்துக் கொள்ள முடியும். இது பிராந்திய பொருளாதார நெருக்கடி அல்ல. இது இலங்கைக்கான நெருக்கடி. 30 மாதங்களாக உங்கள் அரசாங்கம் உருவாக்கிய நெருக்கடி இது. தற்போது தீர்வு தேவை என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். 30 மாதங்களாக செயல்பாட்டில் இருந்த கிணற்றுத் தவளைக் கருத்தைத் தவிர்த்து, இப்போது உலகத்துடன் பேசத் தயாராகிவிட்டீர்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பிரதமர் மோடி வரவிருக்கும் போது கருப்புக் கொடி ஏற்றினீர்கள். இந்தியாவிலிருந்து கொஞ்சம் பணத்தை பெற்று, சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்று சில முயற்சிகளை மேற்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் ஒன்றைச் சொல்ல வேண்டும். மக்கள் அவதிப்படுகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டதை நான் ஒப்புக் கொள்கிறேன். உங்கள் கோரிக்கையை நிறைவேற்றினோம். இது ஒரு பொறுப்பான கட்சி. சில விஷயங்களைச் செய்ய வேண்டாம் என்று எமக்கு கூறினீர்கள். IMF க்கு செல்வதால் ஸ்திரத்தன்மையின் சிக்கலை ஏற்படுத்தும் என்று . நாங்கள் அதைக் கேட்டோம். இந்த அதிகார பேராசையால் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ ஆக வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். பதவிகளுக்குள் எங்களை மட்டுப்படுத்தாதீர்கள். நாட்டிற்கு சரியானதைச் செய்தால் நாங்கள் அதற்கு ஆதரவாக இருப்போம். நாங்கள் எப்போதும் தூதர்களை சந்திப்போம். இந்தியா உங்களுக்கு உதவும் முன், உதவ வேண்டுமா வேண்டாமா என்று என்னிடம் கேட்டார்கள். உண்மைக்கதை. இது நல்லதா கெட்டதா என்று. பொய் என்றால் அமைச்சரிடமே கேளுங்கள். மக்களுக்கு வழங்கக்கூடிய முழு ஆதரவையும் பெற்றுக் கொடுக்குமாறு நாங்கள் கூறினோம்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கருத்து தெரிவித்துள்ளார்.

Latest articles

மிக்ஜம்” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும்...

வாள் வெட்டுடன் சமந்தப்பட்ட வாகனம் மீட்பு, புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாகனம் முல்லைத்தீவு பகுதி புதுக்குடியிருப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த...

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான...

முதலாவது T/20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி T/20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இன்றைய தினம் முதலாவது T/20...

More like this