நாளை (மே 08) பல பகுதிகளில் 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
இதன்படி, கொலன்னாவ நகர சபை பிரதேசத்தில்; மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எதுல் கோட்டே மற்றும் நாவல பிரதேசங்கள்; மற்றும் கொஸ்வத்த மற்றும் ராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையிலான பிரதான வீதி மற்றும் இணைக்கப்பட்ட அனைத்து இடைப்பாதைகளும் நீர் வெட்டு காரணமாக பாதிக்கப்படும் என NWSDB தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை (மே 08) காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 10 மணி நேரம் தண்ணீர் விநியோகம் தடைபடும்.
லங்கா மின்சார நிறுவனம் (பிரைவேட்) லிமிட்டெட் (லெகோ) கொலன்னாவ நீரேற்று நிலையத்திற்கான அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார விநியோகத்தை இடைநிறுத்தியதன் விளைவாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக NWSDB குறிப்பிட்டுள்ளது.