பிரச்சினைகளை மூடி மறைப்பதில் எவ்வித பயனும் இல்லை என முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது இன்று வந்தவை அல்ல, ஜே.ஆரை கொன்று விடுவோம் என்று பலகையை அடித்தார்கள்.
இதற்கு குழப்பமடையாமல் அவர்கள் ஏன் அப்படி கூறுகிறார்கள் என்பது தொடர்பில் கண்டறிய வேண்டும்.
தலைவலி இருப்பவருக்கு உடம்பு வலிக்கு மருந்து கொடுத்து சரிவராது.
ஜனாதிபதியோ, பிரதமரோ, எதிர்க்கட்சித் தலைவரோ நேரடியாக முடிவெடுக்க வேண்டும்.
நேரடியாக முடிவெடுத்து நாட்டு மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.
அந்த பிரச்சினைகளை மூடி மறைப்பதில் எவ்வித பயனும் இல்லை.
மேலும் நோய்க்கு தேவையான சிகிச்சையை அளிப்பதை விடுத்து வேறு நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் பயனில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.