நானுஓயா – ரதல்ல குறுக்கு பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.இந்த விபத்து சம்பவம் நேற்று (14.02.2023) நடந்துள்ளது.
நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை நகரத்தை நோக்கி பயணித்த போது வீதியை விட்டு விலகி பாதுகாப்பு கம்பியில் மோதி முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்நிலையில் காயமடைந்தோர் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 20ஆம் திகதி 7ஆம் திகதி உயிர்களை காவுகொண்ட கோர விபத்து இடம்பெற்றுள்ளது அதே இடத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.