நாட்டில் பல ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இயந்திர கோளாறு காரணமாக இன்று காலை முதல் பல ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த தகவலை ரயில்வே திணைக்கள்ளத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இயந்திர கோளாறு காரணமாக இன்று காலை களுத்துறையில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்க இருந்த ரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சிலாபத்தில் இருந்து பாணந்துறை வரை பயணிக்கும் ரயில் சேவை கொழும்பு கோட்டை ரயில்வே நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 6.40 க்கு பெலியத்த நோக்கி புறப்படவிருந்த ரயில் சேவையும் தாமதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.