செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைநாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பாராளுமன்றத்தில் தீர்வு காணப்படவில்லை - ரணில் விக்கிரமசிங்க

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பாராளுமன்றத்தில் தீர்வு காணப்படவில்லை – ரணில் விக்கிரமசிங்க

Published on

spot_img
spot_img

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பாராளுமன்றத்தில் தீர்வு காணப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க,
“உண்மையில் மக்கள் இந்த முழு பாராளுமன்றத்தையும் சபிக்கின்றனர்.. இந்த நாளையும் வீணடித்து விட்டோம் என தெரிவிக்கின்றனர். நாம் சண்டையிடுகிறோம்.. அரசாங்கமும் எதிர்க்கட்சியும் சண்டையிடுகிறார்கள். எதிர்க்கட்சியும் எதிர்க்கட்சியும் சண்டையிடுகிறார்கள். நம்மை பார்த்துக் கொண்டுள்ளனர். எங்கும் டீசல் இல்லை. உணவு இல்லை, ஜூன் மாதம் நிலைமை எப்படியிருக்கும் என்று தெரியவில்லை.

இந்த சபைக்கு இதனை தேடிக் கொடுக்க முடியுமா?. இந்த காலத்தில் நாங்கள் எதுவும் செய்யவில்லை, ஒருவருக்கு ஒருவர் சேறு பூசினோம், அவதூறாக பேசினோம், இந்த சபையில் நாங்கள் அதைதான் செய்தோம். இதனை நாம் சரியாக பேசவில்லை என்றால் எதிர்காலத்தை பற்றி நினைக்க வேண்டாம். நேற்று அம்பாறையில் என்ன நடந்தது? பொலிஸில் எத்தனை பேருக்கு பிரச்சினை ஏற்பட்டது..? இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை சுற்றிவளைத்தால் எங்கு செல்வது. நாட்டின் பிரச்சினையை தீர்ப்பதில்தான் இதற்கு தீர்வு உள்ளது.

அதைதான் அரசாங்கத்திற்கு தெரிவித்தோம். தயவு செய்து இதற்கு தீர்வு காணவும். நாட்டு மக்கள் கூறுகின்றனர் ராஜபக்ஷக்களை செல்லுமாறு. நம்பிக்கையில்லா பிரேரணையில் நானும் இருக்கிறேன். எனது ஆதரவு தேவையில்லை என்றால் சொல்லுங்கள் நான் விலகி செல்கிறேன். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாம் இங்கு வந்து கத்தி சண்டையிட்டு போவோமானால், மக்கள் எம்மை சுற்றிவளைப்பது நியாயமே.

Latest articles

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழப்பு…..

காலி, புஸ்ஸ, பிந்தலிய சந்தியில் உள்ள பாதுகாப்பு கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற கோர...

சுகாதார தொழிற்சங்கள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 28ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. உத்தியோகபூர்வ...

சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு….

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக உயர்வடைந்துள்ளது.  புத்தளம் மாவட்டத்தின் முந்தலம் 61 ஆவது சந்தியில்...

காணாமல் போன சிறுவன் பிக்குவாக மீட்பு….

மதுரங்குளி பகுதியில் இருந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த 12 வயது மாணவன் கதிர்காமம்,...

More like this