Homeஇந்தியாநாட்டின் 77-வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

Published on

77-வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுதினார். இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார். நாட்டின் பிரதமராக மோடி பொறுப்பேற்றது முதல், 10-வது முறையாக தேசிய கொடியை ஏற்றினார்.

டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிய பின் பிரதமர் மோடி உரை:
இந்தியாவின் 140 கோடி மக்களும் எனது குடும்பத்தினர். அனைத்து இந்தியர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் என டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிய பின் பிரதமர் மோடி தனது உரையில் கூறினார். மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அங்கு தற்போது அமைதி திரும்பி வருகிறது. அமைதியின் மூலமாக மட்டுமே மணிப்பூர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து முயர்ச்சிகளை எடுத்து வருகிறது. மணிப்பூரில் வன்முறையால் பலர் உயிரிழந்துள்ளனர். மணிப்பூர் மக்களுக்கும் ஒட்டுமொத்த இந்திய மக்களும் துணை நிற்பார்கள்.

இந்தியாதான் உலகின் மிகப்பெரிய ஜனநாய நாடு. கொரோனாவிற்கு பிறகு உலகத்தையே இந்தியாதான் வழிநடத்துகிறது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை புதிய நம்பிக்கையுடன் பார்த்து வருகிறது. உலகத்திற்கே இந்தியா மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை, ஜனநாயகம், மக்கள் தொகை இவைதான் நமது சக்தியின் காரணம். இந்தியாவின் மிகபெரிய பலமே நம்பிக்கை தான்; இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது என்று சர்வதேச நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவின் வளர்ச்சியில் இளைஞர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். புத்தாக்க தொழில் துறையில் முதல் 3 இடத்தில் உள்ளோம். நவீனமயமாக்கலை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்றுமதியில் இந்தியா முன்னணி வகிக்கிறது. இந்தியாவில் மக்கள் தொகை மட்டுமின்றி ஜனநாயகம், பன்முகத்தன்மை ஆகியவை நாட்டின் பலமாக உள்ளது. நாட்டில் தொடர் குண்டுவெடிப்புகள் என்ற நிலை தற்போது இல்லை. நக்சல்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் முழுமையாக குறைக்கப்பட்டுள்ளன.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this