Homeஇலங்கைநாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

Published on

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி , நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகள்சாதாரண அலையுடன் காணப்படும்.இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Latest articles

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில்...

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் – பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர்...

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

More like this