பாராளுமன்றத்தை சுற்றி படம்பிடித்துக் கொண்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்றத்தை சூழவுள்ள பகுதிகளை காணொளியில் பதிவு செய்து கொண்டிருந்த போது பிரதான நுழைவாயில் G1 க்கு அருகில் வந்த சந்தேக நபர்கள் இருவர் பாராளுமன்ற பிரிவிற்குட்பட்ட பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையின் போது, சந்தேக நபர்கள் ஒரு பாடலுக்கான வீடியோ எடுப்பதற்காக காட்சிகளை பெற வந்ததாக கூறியுள்ளனர்.
22 மற்றும் 31 வயதுடைய சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் கண்டி மஹய்யாவ மற்றும் வாய்மன் வீதியை சேர்ந்தவர்கள்.
சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.