இன்று வெளியான 2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் தமிழ் மொழிமூலம் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் தர பாடசாலை முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.
அத்துடன் வெளியான கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் தர பாடசாலையின் மாணவி ஒருவர் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார்.
இதேவேளை சாதாரண தரப்பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் கண்டி மஹாமாயா பெண்கள் கல்லூரி முதலிடத்தையும், மூன்றாம் இடத்தை கொழும்பு றோயல் கல்லூரியும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.