“இன்று (ஜன. 2) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை குறைக்க இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை வெள்ளை டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை வெள்ளை டீசல் லீற்றர் ஒன்றின் விலை 405 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 355 ரூபாவாகவும் குறைவடைந்தது.