எரிபொருளின் விலையில் நாளை (05, 06) அதிகரிப்பு ஏற்படலாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி அதிகரிப்பு காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. நேற்று (3ம் திகதி) ஒக்டேன் 92 மற்றும் 95க்கான 27 ரூபா சுங்க வரியை 52 ரூபாவாக அதிகரிக்க நிதியமைச்சு தீர்மானித்திருந்தது.
அத்துடன் 13 ரூபாவாக இருந்த சுப்பர் டீசலுக்கு விதிக்கப்பட்ட சுங்க வரி 38 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு நிதியமைச்சகத்துடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கும் என்றும் அதே வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.
சமிந்த சில்வா