பயகல கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நேற்று பிற்பட்ட கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காணாமல்போனவர் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய கிரிஷாந்த என்ற இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவ்வாறு காணாமல் போன இளைஞன் மேலும் மூன்று இளைஞர்களுடன் பயகல தியலகொட பிரதேசத்தில் நீராடச்சென்ற போது அலையில் சிக்கி அடித்துச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, காணாமல்போன இளைஞரை தேடும் பணியில் பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ளனர்.