ஜெர்மனியிலிருந்து Lufthansa விமானம் தாய்லந்திற்குப் புறப்பட்ட நிலையில், விமானத்தில் பயணித்த தம்பதிகள் சண்டையால் புதுடில்லியில் தரையிறகியதாக கூறப்படுகின்றது.
பயணிகளுக்கு இடையிலான வாக்குவாதத்தால் விமானம் திருப்பிவிடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் கூறின. கணவன்- மனைவி மீது உணவுப் பொருள்களை வீசியதாகவும் அவரைத் திட்டியதாகவும் கூறப்பட்டது.
விமானச் சிப்பந்திகள் கூறியதையும் ஆடவர் கேட்கவில்லை என்றும் மனைவி விமானியிடம் கணவர் தொடர்பில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து விமானத்தை விமானி புதுடில்லிக்குத் திருப்பியதாகவும் தம்பதி விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.