நடிகை ஆலியா பட் சமீபத்தில் வெளியான “கங்குபாய் கத்தியவாடி” திரைப்படத்தில் நடித்ததற்காக பாராட்டுகளை பெற்று வந்தார். “R R R” திரைப்படத்திலும் அவருக்கு சீதா வேடம் கொடுக்கப்பட்டதால் இரசிகர்களிடம் நல்ல மதிப்பை பெற்றிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு குளிர்பான விளம்பரத்தில் நடித்திருந்தார்.
அதில் சர்க்கரை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று குறிப்பிட்டுள்ளார். இதை எதிர்த்து இரசிகர்கள் சில வீடியோக்களை பகிர்ந்துள்ளனர்.
இந்த வீடியோவில் ஆலியாபட் நடித்த “கலங்க்” என்ற திரைப்படத்தின் நிகழ்ச்சியில் ஆலியாபட் நான் சர்க்கரை சாப்பிடுவதில்லை. அது ஆரோக்கியமற்றது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதைப் பகிர்ந்து வரும் இரசிகர்கள் பணத்திற்காக எதையும் செய்யத் துணியக்கூடாது என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.