நடிகர் மன்சூர் அலிகான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தனக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மன்சூர் அலிகான் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்நிலையில், பல பகுதிகளில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
நேற்று புதன்கிழமை (17) குடியாத்தம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
மன்சூர் அலிகான் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.