ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. சமீப காலமாக அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ஜீ தமிழ் டிவியின் சர்வைவர் ஷோவில் தொகுப்பாளராக வந்தார். அடுத்து அவர் மகள் ஐஸ்வர்யாவை வைத்து ஒரு படம் இயக்கும் திட்டத்தில் இருக்கிறார் எனவும் தகவல்கள் வந்தது.
அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். முதல் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் சில படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும் அஞ்சனா அர்ஜுன் என்ற இன்னொரு மகளும் அர்ஜுனுக்கு இருக்கிறார்.
அவரது பிறந்தநாளை சமீபத்தில் குடும்பத்தினர் கொண்டாடி இருக்கின்றனர். அதன் புகைப்படங்கள் இதோ..