Homeஇந்தியாநடிகர் அமிதாப் பச்சன் பங்களா அருகே ஆட்டோ ரிக்சாவில் பயணித்த பெண் மானபங்கம் செய்யப்பட்டார்.

நடிகர் அமிதாப் பச்சன் பங்களா அருகே ஆட்டோ ரிக்சாவில் பயணித்த பெண் மானபங்கம் செய்யப்பட்டார்.

Published on

மும்பை, மராட்டியத்தின் மும்பை நகரில் ஜுகு பகுதியில், பிரபல இந்தி திரையுலக நடிகர் அமிதாப் பச்சனின் பிரதீக்சா என்ற பங்களா அமைந்து உள்ளது. அந்த வழியே ஆட்டோ ரிக்சா ஒன்றில் பெண் ஒருவர் பயணம் செய்து உள்ளார். அந்த ஆட்டோ, சாலை சந்திப்பு அருகே இரவு 10 மணியளவில் சென்று உள்ளது. அப்போது, ஒருவர் ஆட்டோவில் ஏறுவதுபோல் அதனை அணுகி உள்ளார். இதன்பின்னர், ஆட்டோவில் இருந்த பெண்ணை நெருங்கி அவருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துவிட்டு, தப்பி சென்று உள்ளார். இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் பிரிவு 354-ன் கீழ் வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டை நடத்தினர். இதன்படி, அந்த பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமிராக்களில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், அரவிந்த் அஜய் வகேலா (வயது 47) என்பவரை பிடித்து விசாரித்து உள்ளனர். அதில், அந்நபர் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த விவரங்களை ஒப்பு கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து குற்றவாளியான அஜய் வகேலாவை கைது செய்தனர். அவர், ஜுகு பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் அருகே சாலையில் பொருட்களை வைத்து, அவற்றை விற்பனை செய்து வந்து உள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this