அண்மைய வரி திருத்தம் உள்ளிட்ட அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (மார்ச் 09) முதல் தொழிற்சங்க தொடர் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில், இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் (FUTA) ஈடுபடவுள்ளது.
இதற்கிடையில், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மார்ச் 13 க்குப் பிறகு இந்த அரசாங்க எதிர்ப்பு வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் நாடு எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க எச்சரித்தார்.
நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.