தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் சார்பில் வரும் 1ம் தேதி மற்றும் 9ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் 2 இ.எஸ்.ஐ சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெறும் என்று இ.எஸ்.ஐ நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்ட அறிக்கை: சென்னை, மண்டல அலுவலகம், தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் சிறப்பு குறை தீர்ப்பு முகாமை தொழில் முனைவோர், காப்பீட்டாளர் போன்ற இ.எஸ்.ஐ பயனாளிகளுக்காக வரும் 1ம் தேதி மற்றும் 9ம் தேதிகளில் பிற்பகல் 2.30 மணியளவில் நுங்கம் பாக்கம், ஸ்டெர்லிங் ரோடு, தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், மண்டல அலுவலகத்தில் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து பயனாளிகளும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் சார்பில் 2 நாட்கள் இ.எஸ்.ஐ சிறப்பு குறை தீர்ப்பு முகாம்.
Published on
