நுரைச்சோலை மின் உற்பத்தி மையத்தில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில் அதன் திருத்த பணிகள் 5 நாட்கள் வரை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மின்சார தடை நேரம் நீடிக்கப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
270 மெகாவட் மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அனல் மற்றும் ஹைட்ரோ ஆலைகளைப் பயன்படுத்தி மின்சார தடை நேரத்தை மேலும் நீட்டிக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார்.