கெபிதிகொல்லேவ மற்றும் மஹியங்கனை பொலிஸ் நிலையங்களினால் இரண்டு வெவ்வேறு இடங்களில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 10 தொல்பொருள் கொள்ளையர்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹியங்கனை அபயபுர மாபகட பிரதேசத்தில் தொல்பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருவதாக மஹியங்கனை பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.
அதன்படி, குறித்த இடத்தை சுற்றிவளைத்த பொலிஸார், குறித்த சுற்றிவளைப்பின் போது, தோண்டும் உபகரணங்கள் மற்றும் பூஜை பொருட்களுடன் தோண்டிய 07 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் பன்னிபிட்டிய, ஹோகந்தர, பாதுக்க, மஹியங்கனை மற்றும் நுகேகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இன்று மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, கெபிதிகொல்லேவ லுனுஎதுலேவ பிரதேசத்தில் தொல்பொருட்களை தோண்டிக்கொண்டிருந்த மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களில் கம்பஹா பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் பொறுப்பதிகாரியும் அடங்குவார். சந்தேக நபர்களை இன்று கெபித்திகொல்லாவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.