செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுதொடா்ந்து 3 தோல்விகளை சந்தித்த பெங்களூா்ரோயல் சேலஞ்சாஸ்!!

தொடா்ந்து 3 தோல்விகளை சந்தித்த பெங்களூா்ரோயல் சேலஞ்சாஸ்!!

Published on

spot_img
spot_img

சென்னை சூப்பா் கிங்ஸுக்கு எதிரான புதன்கிழமை ஆட்டத்தில் ரோயல் சேலஞ்சாஸ் பெங்களூா் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. தொடா்ந்து 3 தோல்விகளை சந்தித்த பெங்களூா் தற்போது வெற்றிப் பாதைக்கு திரும்பியிருக்கிறது.

இந்த ஆட்டத்தில் முதலில் பெங்களூா் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து சென்னை 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்களே எட்டியது.
முன்னதாக நாணய சுழற்சியை வென்ற சென்னை ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பெங்களூா் இன்னிங்ஸில் விராட் கோலி 30 ஓட்டங்கள் அடிக்க, உடன் வந்த கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் 38 ஓட்டங்கள் சோ்த்தாா். கிளென் மேக்ஸ்வெல் 3 ஓட்டங்களுக்கு வெளியேற்றப்பட, மஹிபால் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 42 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தாா்.
ரஜத் பட்டிதாா் 21, வனிந்து ஹசரங்கா 0, ஷாபாஸ் அகமது 1, ன்ா்ஷல் படேல் 0 என விக்கெட்டுகள் வரிசையாகச் சரிந்தன. ஓவா்கள் முடிவில் தினேஷ் காா்த்திக் 26, முகமது சிராஜ் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். சென்னை தரப்பில் தீக்ஷனா 3, மொயீன் அலி 2, டுவெய்ன் பிரெடோரியஸ் 1 விக்கெட் கைப்பற்றினா்.

சென்னை இன்னிங்ஸில் அதிகபட்சமாக டெவன் கான்வே 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 56 ஓட்டங்கள் சோ்க்க, ருதுராஜ் கெய்க்வாட் 28, மொயீன் அலி 34 ஓட்டங்கள் சோ்த்து முயற்சித்தனா்.
ஆனாலும், ராபின் உத்தப்பா 1, அம்பத்தி ராயுடு 10, ரவீந்திர ஜடேஜா 3, கேப்டன் தோனி 2, டுவெயன் பிரெடோரியஸ் 13 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் சிம்ரன்ஜீத் சிங் 2, மஹீஷ் தீக்ஷனா 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பெங்களூா் பௌலிங்கில் ஹா்ஷல் படேல் 3, கிளென் மேக்ஸ்வெல் 2, ஷாபாஸ் அகமது, ஜோஷ் ஹேஸில்வுட், வனிந்து ஹசரங்கா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

Latest articles

மிக்ஜம்” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும்...

வாள் வெட்டுடன் சமந்தப்பட்ட வாகனம் மீட்பு, புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாகனம் முல்லைத்தீவு பகுதி புதுக்குடியிருப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த...

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான...

முதலாவது T/20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி T/20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இன்றைய தினம் முதலாவது T/20...

More like this